சினிமா
நூலிழையில் தப்பிய நடிகை ஊர்மிளா!

Dec 29, 2024 - 05:50 PM -

0

நூலிழையில் தப்பிய நடிகை ஊர்மிளா!

மராட்டிய  தொலைக்காட்சி தொடர்களிலும் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஊர்மிளா கோத்தாரே. துனியாதாரி, சுபா மங்கள் சாவதன், மாலா ஆய் வ்ஹாய்ச்சி, தி சத்யா கே கார்டே உள்ளிட்ட மராத்திய படங்களில் நடித்து பிரபலமான ஊர்மிளா தெலுங்கில் வெல்கம் ஒபாமா படத்தில் நடித்து அறிமுகமாகினார்.

 

இயக்குநரும் நடிகருமான ஆதிநாத் கோத்தாரே என்பவரை திருமணம் செய்து கொண்ட ஊர்மிளாவுக்கு ஜிஜா கோத்தாரே என்ற மகள் இருக்கிறார். சனிக்கிழமையன்று படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பையில் கண்டிவாலியில் காரில் வந்து கொண்டிருந்தபோது கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

நடிகையின் கார் ஓட்டுநர் நிதானமாக காரை ஓட்டிவந்த போதும் கார் கட்டுப்பாட்டை இழந்து அந்தப் பகுதியில் மெட்ரோ பணியில் ஈடுபட்டிருந்த இரு தொழிலாளர்கள் மீது மோதியுள்ளது.

 

இதில் ஒரு மெட்ரோ பணியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க மற்றொருவர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் அதில் இருந்த ஏர்பேக் ஓபன் ஆனதைத்தொடர்ந்து நடிகை ஊர்மிளா கோத்தாரே மற்றும் அவரது கார் ஓட்டுநர் சிறு காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்.

 

விபத்துக்குறித்து அறிந்த சம்தா நகர் பொலிஸார் விபத்து தொடர்பாக விசாரனை நடத்தி ஊர்மிளா கோத்தாரேவின் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05