வணிகம்
ஆரம்ப உலகளாவிய CEO விருதுகள் இரவு 2024 நிகழ்வில் பிரகாசித்த NDBயின் தலைமைத்துவம்

Dec 30, 2024 - 10:39 AM -

0

ஆரம்ப உலகளாவிய CEO விருதுகள் இரவு 2024 நிகழ்வில் பிரகாசித்த NDBயின் தலைமைத்துவம்

நெஷனல் டெவலப்மென்ட் வங்கி பிஎல்சி (NDB) ஆனது உலகளாவிய பிரதம நிறைவேற்றதிகாரி விருதுகள் [Global CEO Awards] இரவு 2024 நிகழ்வில் , அதன் உயர்மட்ட தலைமைக் குழுவினர் அங்கீகாரம் பெற்றமையை கொழும்பில் உள்ள ITC ரத்னாதிபாவில், பெருமையுடன் கொண்டாடியது. இலங்கையின் வர்த்தக உலகின் ஆஸ்கார் விருதுகள் என அழைக்கப்படும் இந்த ஆரம்ப நிகழ்வானது, இன்றைய மாறும் வர்த்தகச் சூழலின் சவால்களை எதிர்கொள்வதில் அவர்களின் மீளெழுச்சி , சிறப்பான செயற்பாடுகள் மற்றும் தொலைநோக்கு தலைமைத்துவம் ஆகியவற்றில் முன்மாதிரியாக திகழும் தலைவர்களை கௌரவித்தது.

NDB இன் சிறப்புமிக்க தலைவர்களில் ஏழு பேர் அவர்களின் சிறந்த பங்களிப்புகளுக்காக கௌரவிக்கப்பட்டனர். இதற்கிணங்க கெலும் எதிரிசிங்க, பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி கே.வி.வினோஜ், பிரதி பிரதம நிறைவேற்றதிகாரி, ஹசிதஅத்தபத்து, நிதி துணைத் தலைவர், ஷெஹானி ரணசிங்க, துணைத் தலைவர், நிறுவனச் செயலாளர் ஸியான் ஹமீத் துணைத் தலைவர், கிளை வலையமைப்பு முகாமைத்துவம் மற்றும் உற்பத்தி அபிவிருத்தி அலெக்ஸ் பெரேரா, துணை தலைவர், பிரதான இடர் அதிகாரி மற்றும் தர்ஷன ஜயசிங்க, உதவி துணை தலைவர், சந்தைப்படுத்தல் தலைவர் ஆகியோர் இந்த கௌரவத்தை பெற்றனர்.

உலகளாவிய CEO விருதுகள் இரவு 2024 இலங்கையின் முதல் நிகழ்வாக ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிப்பதாக அமைந்தது. இது சிறந்த தலைமை மற்றும் சாதனைகளுக்காக 50 தொலைநோக்கு CEO க்கள் மற்றும் அவர்களது குழுக்களை கௌரவித்தது . இந்த அங்கீகார செயல்முறையானது பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நிபுணர்கள் குழுவால் மேற்பார்வையிடப்பட்டதுடன் மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்வதற்காக கடுமையாக தணிக்கை செய்யப்பட்டது.

இந்த மகிழ்வான தருண நிகழ்வில் உரையாற்றிய NDBவங்கியின் பிரதம நிறைவேற்றதிகாரி கெலும் எதிரிசிங்க, “இந்த அங்கீகாரமானது முழு NDB குழுவினரின் ஒருமித்த அர்ப்பணிப்பு மற்றும் மூலோபாய தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சான்றாகும். இது எமது பங்குதாரர்களின் நலனுக்காக மட்டுமன்றி இலங்கையின் பொருளாதார மீள்எழுச்சி மற்றும் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதில் சிறந்து விளங்குவதற்கும் புத்தாக்கங்களை உருவாக்குவதற்குமான எங்களின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

புத்தாக்கத்தை செயற்படுத்துதல் , வாடிக்கையாளரை மையப்படுத்திய சேவை மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தும் அதே வேளையில், சவால்களுக்கு தொடர்ந்து முகம் கொடுத்து அதனை வெற்றிப்படிகளாக மாற்றியமைக்கும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைக் குழுவின் கீழ் இயங்குகின்ற வங்கித் துறையில் முன்னணியில் உள்ள NDBயின் நிலையை இந்த விருதுகள் வெளிப்படுத்துவதாக உள்ளது. உலகளாவிய CEO விருதுகளில் NDB இன் தலைமைத்துவத்தை அங்கீகரிப்பதானது வங்கியின் மூலோபாய நோக்கு மற்றும் இலங்கையின் நிதிய நிலப்பரப்பில் அதன் நீடித்த தன்மைக்கு ஒரு சான்றாகும்.

NDB வங்கி இலங்கையில் நான்காவது பாரிய பட்டியலிடப்பட்ட வணிக வங்கியாகும். ஆசிய வங்கியியல் மற்றும் நிதி சில்லறை வங்கியியல் விருதுகள் 2023 இல் ஆண்டின் சிறந்த சில்லறை வங்கி (இலங்கை) மற்றும் Asiamoney ஆல் சிறந்த கூட்டாண்மை வங்கி 2023 என பெயரிடப்பட்டது. மேலும் 2022 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இலங்கையில் அதிக விருதுகளைப் பெற்ற நிறுவனமாக இலங்கையின் LMD சஞ்சிகையினால் வருடாந்த தரவரிசையில் வரிசைப்படுத்தப்பட்டது.Global Finance USA மற்றும் Euromony ஆகியவற்றின் வருடாந்த சிறந்த வங்கி விருது நிகழ்ச்சிகளில் 2022 இல் இலங்கையின் சிறந்த வங்கியாக தெரிவு செய்யப்பட்டது. மேலதிகமாக , USA யிலுள்ள கிரேட் பிளேஸ் டு வொர்க்அமைப்பினால் இலங்கையில் 2022 இல் சிறந்த 50 பணியிடங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. NDB என்பது NDB குழுமத்தின் தாய் நிறுவனமாகும்,இது மூலதன சந்தை துணை நிறுவனங்களை உள்ளடக்கியநிலையில் ஒரு தனித்துவமான வங்கியியல் மற்றும் மூலதன சந்தை சேவைகள் குழுவை உருவாக்குகிறது. டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளினை பயன்படுத்தி அர்த்தமுள்ள நிதி மற்றும் ஆலோசனை சேவைகள் மூலம் தேசத்தையும் அதன் மக்களையும் மேம்படுத்துவதற்கு வங்கி உறுதிபூண்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05