Dec 30, 2024 - 05:08 PM -
0
இன்று (30) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையில் 413 மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், கவனக் குறைவாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டியதற்காக 49 சாரதிகள் மீதும், அதிவேகமாக வாகனத்தை செலுத்திய 110 சாரதிகள் மீதும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 1,086 சாரதிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினைகளுடன் தொடர்புடைய 694 சாரதிகள் மீதும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 5,324 சாரதிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் போக்குவரத்து விதி மீறல்களுக்காக மொத்தம் 7,676 சாரதிகள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.