Dec 30, 2024 - 05:18 PM -
0
நல்லதண்ணி - மஸ்கெலியா பிரதான வீதியின் மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் கெப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கெப் வண்டியில் வந்தவர்கள் நேற்று (29) ஸ்ரீபாதயில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் இன்று (30) கொடகவெல நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களே காயமடைந்துள்ளதாகவும், கெப் வண்டியில் 7 பேர் பயணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் 5 பேர் காயமடைந்து மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமானதால், டிக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
கெப் வண்டியில் பயணித்த குழந்தை மற்றும் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கெப் வண்டியின் சாரதி தூங்கியதால் இந்த விபத்து நேர்ந்ததாகவும், விபத்தில் கெப் வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.