செய்திகள்
ஜனாதிபதி நிதிய அலுவலகம் இனி புதிய இடத்தில்...

Dec 30, 2024 - 05:30 PM -

0

ஜனாதிபதி நிதிய அலுவலகம் இனி புதிய இடத்தில்...

ஜனாதிபதி நிதிய அலுவலகத்தை புதிய இடத்திற்கு மாற்றுவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3 வது மாடியில் பராமரிக்கப்பட்டு வந்த ஜனாதிபதி நிதிய அலுவலகம், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்படவுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் புதிய அலுவலக வளாகம் கொழும்பு 01, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கட்டிடத்தின் கீழ் தளத்தில் நிறுவப்பட உள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள ஜனவரி 1, 2025 முதல் வரும் பொதுமக்கள், ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக, ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கட்டிடத்தின் கீழ் தளத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் தமக்கான சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05