Dec 31, 2024 - 07:50 AM -
0
நடிகர் தனுஷ் என்னதான் தனிப்பட்ட வாழ்க்கையில் சறுக்கினாலும், தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தயரிப்பாளராகவும் பல படங்களை பண்ணி வருகிறார்.
கடைசியாக இவருடைய நடிப்பில் வெளிவந்த ராயன் திரைப்படத்தை இயக்கி தயாரிக்கவும் செய்தார். தற்போது தன்னுடைய அடுத்த படமான இட்லி கடை படத்தை இயக்கி வருகிறார்.
அது மட்டுமல்லால் தன்னுடைய அக்கா பையனை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தை தயாரித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து வேலைகளில் பிஸியாக வலம் வந்த தனுசுக்கு, திடீரென உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்துள்ளது.
இந்த நிலையில், இவர் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படம் தனுஷின் சொந்த ஊரான தேனியில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தது. இப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ள நிலையில், சண்டை காட்சிகள் மட்டும் எடுக்க வேண்டியுள்ளது. இப்படத்தில் தனுசுக்கு வில்லனாக அருண்விஜய் நடிக்கிறார்.
தற்போது தனுஷுக்கு வைரஸ் காய்ச்சல் உறுதியாகியுள்ளதால், அவர் முழுவதும் ஓய்வில் இருக்கிறார். இதனால் விறுவிறுப்பாக சென்ற இட்லி கடை ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கூடிய விரைவில் உடல் நிலை சரியாகி படத்தின் சண்டை காட்சிகளை ஷூட் பண்ணுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.