உலகம்
எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்

Dec 31, 2024 - 08:01 PM -

0

எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்

ட்விட்டர் என்ற சமூக வலைதளத்தை விலைக்கு வாங்கிய எலான் மஸ்க் அதை எக்ஸ் என்று பெயரை மாற்றிய நிலையில் தற்போது தனது பெயரில் இயங்கி வந்த எக்ஸ் ஐடியையும் மாற்றி உள்ளார். புதிய ஐடி குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார்.


உலகின் முன்னணி செல்வந்தர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் , ட்விட்டர் தளத்தை விலைக்கு வாங்கி அதன் பெயரை எக்ஸ்  என்று மாற்றினார். அதன்பின் உயர்மட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்வது உள்ளிட்ட பல மாற்றங்களை கொண்டு வந்தார்.


பெயரில் இருந்த தனது எக்ஸ் ஐடியின் பெயரை 'கெகியஸ் மாக்சிமஸ்' என்று மாற்றியுள்ளார். அதேபோல் தனது ஐடியின் முகப்பு படத்தையும் மாற்றி பெபே தவளை மீமில் வரும் புகைப்படத்தை வைத்துள்ளார்.


எலான் மஸ்க் எதற்காக இந்த மாற்றத்தை செய்துள்ளார் என்று தெரியவில்லை என்றாலும் புதிய பெயரில் உள்ள ஐடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05