Jan 1, 2025 - 12:52 PM -
0
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இடம்பெறவுள்ள டெஸ்ட் மற்றும் ஒரு ஒருநாள் போட்டித் தொடருக்கான விபரங்களை ஶ்ரீலங்கா கிரிக்கட் வௌியிட்டுள்ளது.
அதற்கமைய, முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 29ஆம் திகதி முதல் பெப்ரவரி 2ஆம் திகதி வரை காலி சர்வதேச மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 06ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை காலி சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதேவேளை, இரு அணிகளுக்குமான ஒரேயொரு ஒருநாள் போட்டி இடம்பெறவுள்ளதோடு, குறித்த போட்டியானது ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் பெப்ரவரி 13ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.