கிழக்கு
மட்டக்களப்பில் நள்ளிரவு ஆராதனைகள்!

Jan 1, 2025 - 02:14 PM -

0

மட்டக்களப்பில் நள்ளிரவு ஆராதனைகள்!

புதுவருட பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன.

 

புதுவருட பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதல் பேராலயமாக உள்ள மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

 

புனித மரியாள் பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் தலைமையில் விசேட கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

 

இதன்போது பொருளாதார நெருக்கடி மற்றும் இயற்கை அனர்த்தங்களிலிருந்து இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும் நாட்டில் நீடித்த அமைதியும் மகிழ்ச்சி நிலவவும் விசேட பிரார்த்தனையும் நடாத்தப்பட்டது.

திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.

 

இன்றைய புதுவருட ஆராதனையின்போது ஆலயத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05