மலையகம்
மலையகத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

Jan 1, 2025 - 04:03 PM -

0

மலையகத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

உலகெங்கிலும் இன்று (01) ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

 

அந்தவகையில் மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வான வேடிக்கைகளும் இடம்பெற்றன.

 

இதன்போது நள்ளிரவு 12மணியளவில் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன் இவற்றினை கண்டுகளிப்பதற்காக பெருமளவு மக்கள் நகருக்குள் ஒன்றுகூடியிருந்தனர்.

 

புத்தாண்டை முன்னிட்டு கொட்டகலை ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலயத்தில் குருக்கள் ஸ்ரீ கந்தன் தலைமையில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

 

நாட்டில் சாந்தியும் சமாதானம் ஏற்படவும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.

 

இன்று பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகைதந்து நெய் விளக்கு ஏற்றி வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் தங்களுக்குள் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொண்டதை காணமுடிந்தது.

 

அத்தோடு கிறிஸ்தவ தேவாலயங்களில் புதுவருட ஆராதனைகளும், மசூதிகளில் விசேட தொழுகைகளும், இடம்பெற்றதோடு, விகாரைகளிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05