செய்திகள்
வெற்றிகரமாக 20ஆவது ஆண்டில் காலடி வைக்கும் டி.வி. தெரண

Jan 1, 2025 - 10:43 PM -

0

வெற்றிகரமாக 20ஆவது ஆண்டில் காலடி வைக்கும் டி.வி. தெரண

2025ஆம் ஆண்டு புத்தாண்டை முழு நாடும் புதிய நம்பிக்கைகளுடன் வரவேற்கும் நிலையில், இந்த ஆண்டு எமக்கும் முக்கியமான ஆண்டாகும்.

 

இந்நாட்டில் ரசிகர்களை தொலைக்காட்சி ஊடகத்தின் ஒரு குறுகிய வட்டத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த வேளையில், மாற்றத்தின் புரட்சியை உருவாக்கி உருவாக்கப்பட்ட எமது "தெரண" தனது அதி வெற்றிகரமான பயணத்தின் இருபதாவது ஆண்டில் இன்று (01) பிரவேசித்துள்ளது.

 

பட ஊடகக் கலையின் ட்ரெண்ட்செட்டர்களில் ஒரு தொலைக்காட்சி சேனலாக மட்டும் இல்லாமல், தேவைப்படும் நேரத்தில் அவர்களுக்கிடையே நிற்கும் தெரண, இந்த பயணத்தில் உங்களுடன் சேர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

 

இந்நாட்டில் தொலைக்காட்சி ஊடகத்திற்கு புதிய கருத்துக்கள் தேவைப்பட்ட நேரத்தில், தெரண, 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி எமது பாரம்பரியத்தை சுமந்து செல்லும் புதிய தொலைக்காட்சி சேவையாக நிறுவப்பட்டது.

 

'எமக்குரியவற்றை பாதுகாப்பதுடன் புதியவற்றுடன் முன்னோக்கி' என்ற கருப்பொருளுடன் ஆரம்பமானது.

 

இன்று, தெரண பார்வையாளர்களின் நம்பிக்கையின் மகுடத்தைப் பெற்றுள்ளதுடன், இலங்கையில் தொலைகாட்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், செய்திகள், மற்றும் அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் ரியாலிட்டி தொலைக்காட்சியை விஞ்சியுள்ளது.

 

இலங்கை சிறார்களின் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் 'தெரண லிட்டில் ஸ்டார்' அறிமுகப்படுத்தப்பட்டது.

 

இலங்கைத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக, 2006 ஆம் ஆண்டு மிஸ் ஸ்ரீலங்காவுக்கான பிரபஞ்ச அழகி போட்டியை டிவி தெரண நேரடியாகக் ஔிபரப்பியதுடன். 'தெரண ட்ரீம் ஸ்டார்', தெரண சிட்டி ஆஃப் டான்ஸ், தெரண 60 பிளஸ், தெரண திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை ஔிபரப்பி வருகிறது.

 

இலங்கையின் செய்திகளின் தலைவராக, மக்களின் தகவல்களை அறியும் உரிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் 'அத தெரண', தெற்காசியாவின் மிகப் பெரிய மற்றும் நவீன செய்தி அறையிலிருந்து செய்திகளை வழங்கி, நாட்டின் தொலைக்காட்சித் துறையின் முன்னோடியாய் திகழ்கிறது.

 

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் முடிவுகள், அத தெரணயிலேயே நாட்டில் அதிகளவான மக்கள் பார்வையிட்டது என்பது அதற்கு சாட்சி.

 

தமது ஊடகப் பணியை முன்னெடுத்துச் செல்லும் தெரண, மனுசத் தெரண, லிட்டில் ஹார்ட்ஸ் போன்ற பல சிறப்பான சமூக சேவைத் திட்டங்களில் இணைந்து நாட்டிற்குத் தேவையான இடங்களில் தனது கடமையை அயராது நிறைவேற்றியது.

 

சிறுநீரக நோயாளர்களை அடையாளம் காணும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட மனுசத் தெரண, மஹரகம ஆபெக்‌ஷா வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேன் இயந்திரம் வழங்கும் முயற்சியை முன்னெடுத்தது, இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய இரத்த ஸ்டெம்செல் தானம் திட்டமான லிட்டில் ஹார்ட்ஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. 

 

அதன்படி தேசிய பேரிடர் காலங்களில் மனுசத் தெரண மக்களுக்காக முன்வந்தது போன்று தேசிய மட்டத்தில் திறமையான பல பெண் விளையாட்டு வீராங்கனைகளை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தும் வகையில் தெரண திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

சிறந்து மற்றும் நம்பகத்தன்மையின் இருபதாவது வருடத்திற்குள் நுழையும், TV Derana மற்றும் Ada Derana, ஒரு அற்புதமான மற்றும் மகிழ்ச்சிகரமான தொலைக்காட்சி பயணத்தின் தனித்துவமான அடையாளங்களில் நம்பர் ஒன் சேனல் மற்றும் மிகவும் நம்பகமான சேனல் என்ற மக்கள் விருதை பெற்றுள்ளது.

 

அதன்படி, புதிய விடயங்களைப் பார்வையாளர்களுக்கு எடுத்துச் சென்று அவர்களின் அறிவு, அணுகுமுறை மற்றும் ரசிப்புக்காக பரந்த பணியை முன்னெடுத்த TV Derana தொடர்ந்து ஏழாவது முறையாக மக்கள் விருது விழாவில் மக்கள் தொலைக்காட்சி சேனலாக விருது பெற்றது.

 

இப்படியாக, பார்வையாளர்களின் அன்பையும் நம்பிக்கையையும் வென்று 2025ல் இருபது ஆண்டுகளை நிறைவுசெய்யும் 'இருபது வருட செயல்திறன் தலைவர்', மேலும் ஒரு நூற்றாண்டுக்கு உங்களை மகிழ்விக்கத் தயாராக உள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05