வடக்கு
இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு

Jan 2, 2025 - 10:30 AM -

0

இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு

கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கணை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

A 35 பிரதான வீதியின் புளியம்போக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளன.

 

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதே வேளை, புறக்கோட்டை மிதக்கும் வணிக வளாகத்திற்கு (floating market) அருகே உள்ள நீரோடையில்  அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று (02) காலை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டதக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05