Jan 2, 2025 - 11:28 AM -
0
முன்னாள் இந்துகலாச்சார அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தியாகராஜா மகேஸ்வரனின் 17 ஆவது நினைவேந்தல் யாழ். இணுவில் பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மானிப்பாய் தொகுதி காரியாலயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். கிளிநொச்சி மாவட்டங்களின் தலமைக்காரியாலயத்தின் ஏற்பாட்டில் நேற்று (01) மாலை நடைபெற்றது.
01/01/2008 அன்றைய தினம் கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேசுவரர் ஆலயத்தின் ஆங்கில புத்தாண்டு பூசை வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற போது ஆயுத தாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
1990 ஆண்டில் இருந்து ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து அரசியல் பயணத்தில் ஈடுபட்டார்.
தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்து வந்த மகேஸ்வரன் 2008 ஆண்டு 01 மாதம் 01 திகதி ஆலய வழிபாட்டின் போது படுகொலை செய்யப்பட்டார்.
இந் நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட தொகுதிகளின் அமைப்பாளர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
--