மலையகம்
தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

Jan 2, 2025 - 11:58 AM -

0

தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை கிளாஸ்கோ பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபரொருவரை பொலிஸாரால் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய  தகவலுக்கமைய இச்சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், இதன் போது 11 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவை சுமார் 2 அடி உயரம் வரை வளர்ந்திருந்தது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் உதவி தோட்ட அதிகாரி சந்தேகத்தின் பேரில் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்தார்.

 

இதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகளையும் இன்று (02) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் அக்கரப்பத்தனை  பொலிஸார்  தெரிவித்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05