வணிகம்
அலியான்ஸ் லங்காவின் Women in Leadership ஆனது பதின்மவயதினருக்காக, “டிஜிட்டல் தலைமுறையில் வாழ்க்கைக்கு தயார்படுத்தல்” என்ற நிகழ்வை நடத்தியுள்ளது

Jan 2, 2025 - 12:31 PM -

0

அலியான்ஸ் லங்காவின் Women in Leadership ஆனது பதின்மவயதினருக்காக, “டிஜிட்டல் தலைமுறையில் வாழ்க்கைக்கு தயார்படுத்தல்” என்ற நிகழ்வை நடத்தியுள்ளது

அலியான்ஸ் லங்காவின் Women in Leadership (WIL) ஆனது “டிஜிட்டல் தலைமுறையில் வாழ்க்கைக்கு தயார்படுத்தல்” (Preparing Teens for Life in a Digital Generation) என்ற தொனிப்பொருளில், அலியான்ஸ் லங்கா ஊழியர்களின் பதின்மவயது பிள்ளைகளுக்காக அலியான்ஸ் லங்கா தலைமை அலுவலகத்தில் ஆழமான அறிவுப்பகிர்வு நிகழ்வொன்றை நடத்தியது. டிஜிட்டல் யுகத்தில் சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதற்கு வழிகாட்டத் தேவையான அறிவு மற்றும் திறன்களை பதின்ம வயது சிறுவர்களுக்கு வழங்கி, அவர்களை தயார்படுத்துவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.

கொழும்பு, சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி, பொலிஸ் பிரதம இன்ஸ்பெக்டர் திரு. மனோஜ் சமரசேகர அவர்களுடனான இடைத்தொடர்பாடல் அமர்வுடன் இந்நிகழ்வு ஆரம்பமானது. இணைய பாதுகாப்பு, பொறுப்புள்ள வழியிலான டிஜிட்டல் நடத்தை மற்றும் இணைய வெளியில் தனிப்பட்ட தகவல் விபரங்களைப் பாதுகாத்தல் ஆகியன குறித்து அவர் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, உளவளவியல் ஆலோசகரும், அங்கீகரிக்கப்பட்ட பெற்றோர் பயிற்றுவிப்பாளரும், வர்த்தகப் பயிற்றுவிப்பாளருமான மாயா திசாநாயக்க அவர்கள் மன அழுத்தத்தை நிர்வகித்து, திரையில் செலவிடும் நேரம் மற்றும் வாழ்வின் ஏனைய விடயங்களுக்கு இடையில் ஆரோக்கியமான சமநிலையைப் பேணுவது குறித்த நடைமுறைரீதியான வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்கினார்.

அலியான்ஸ் லங்காவின் Women in Leadership ஆனது தனது ஊழியர்களின் குடும்பங்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் விருத்திக்கு ஆதரவளிப்பதில் தொடர்ந்தும் இடைவிடாத அர்ப்பணிப்பைக் கொண்டுள்ளது. அடுத்த தலைமுறைக்கு அறிவையும், திறன்களையும் வழங்கி அதனைத் தயார்படுத்தி, மிக வேகமாக மாற்றம் கண்டு வருகின்ற டிஜிட்டல் உலகில் பிரகாசமான மற்றும் இன்னும் கூடுதலான அளவில் சமநிலை கொண்ட எதிர்காலத்தை WIL தொடர்ந்தும் செதுக்கி வருகின்றது.

அலியான்ஸ் லங்கா என்ற பொதுவான நாமத்தால் அழைக்கப்படுகின்ற, அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் மற்றும் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆகியன ஜேர்மனியின் மியூனிக் மாநகரத்தைத் தலைமையகமாகக் கொண்டு, பிரதானமாக காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிக சேவைகளை வழங்கி வருகின்ற உலகளாவிய நிதியியல் சேவைகள் வழங்குனரான Allianz SE இன் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனமாகும். Interbrand மற்றும் Brand Finance ஆகியவற்றால் “உலகின் 1 தர காப்புறுதி நாமமாக” (World’s No.1 Insurance Brand) அலியான்ஸ் நிறுவனம் உலகளாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அலியான்ஸ் குழுமத்தின் உலகளாவிய பலம் மற்றும் வலுவான மூலதனமயம், உள்நாட்டு நிபுணத்துவம் மற்றும் வணிக ஆற்றல் ஆகியன ஒன்றிணைந்து, அலியான்ஸ் லங்காவின் வெற்றிக்கான வலுவான சூத்திரமாகக் காணப்படுகின்றன. மகத்துவத்தின் பாரம்பரியம் மற்றும் புத்தாக்கத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் பாதுகாப்பான மற்றும் சுபீட்சத்துடனான எதிர்காலத்தை வளர்த்து, தனது வாடிக்கையாளர்களின் பரந்துபட்ட தேவைகளை அலியான்ஸ் லங்கா நிறைவேற்றி வருகின்றது.

Comments
0

MOST READ
01
02
03
04
05