Header Logo
SLIC
மலையகம்
நீதிமன்ற வழக்கு பொருளை திருடிய பெண் உத்தியோகத்தர்!

Jan 2, 2025 - 01:47 PM

நீதிமன்ற வழக்கு பொருளை திருடிய பெண் உத்தியோகத்தர்!
Mobitel Inner 1278
EDEX Inner

நுவரெலியா நீதவான் நீதிமன்றின் வழக்குப் பொருட்கள் களஞ்சியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெறுமதி மிக்க கைத்தொலைபேசியை திருடி தனது காதலனுக்கு பரிசாக வழங்கிய பெண் ஒருவருவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

பெறுமதியான தொலைபேசி காணாமல் போனமை தொடர்பில் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்ததன் பிரகாரம், நுவரெலியா நீதவான் நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

நீதிமன்ற வழக்கு பொருள் களஞ்சியசாலையில் பணிப்புரியும் பெண் ஒருவர் வழக்கு பொருளான கையடக்க தொலைபேசியை திருடி தனது காதலனுக்கு பரிசாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் நுவரெலியா பொலிஸாரால் கடந்த (22) ஆம் திகதி வழக்கு அறையில் பெறுமதியான தொலைபேசி காணாமல் போனமை  தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் நுவரெலியா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சியின் பணிப்புரையின் பிரகாரம் உப பொலிஸ் பரிசோதகர் பிரியதர்ஷன மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் 75607 ரசிக ஆகியோர் தொலைபேசி தரவுகளை சரிபார்த்து காணாமல் போன தொலைபேசியை பயன்படுத்திய நபரை கண்டுபிடித்தனர்.

 

இதன்போது நீதிமன்ற வழக்கு பொருள் களஞ்சியசாலையில் பணிபுரிந்த பெண் உத்தியோகத்தர் ஒருவரே குறித்த தொலைபேசியை காதலனுக்கு பரிசாக வழங்கியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

 

தொலைபேசியைத் களவாடிய சந்தேக நபரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆம் திகதி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதவான் மிஸ் பிரபுத்திகா லங்காங்கனி உத்தரவிட்டுள்ளார்.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278