செய்திகள்
தொழிலாளர்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்

Jan 2, 2025 - 03:54 PM -

0

தொழிலாளர்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்

விரைவாக பதில் அளிப்பதற்காக தொழிலாளர் அமைச்சினால் புதிய வட்ஸ்அப் இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 

0707 22 78 77  என்ற இந்த புதிய வட்ஸ்அப் இலக்கம், சேவைகளை மேலும் திறம்படச் செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.

 

தொழிலாளர் அமைச்சு மற்றும் தொழிலாளர் திணைக்களம் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் மற்றும்  தலையீடுகள் விரைவாக செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

தனியார் மற்றும் அரை-அரச ஊழியர்களின் சேவை பிரச்சினைகளுக்கு உடனடி பதிலளிப்பதே இந்த புதிய வட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியதன் மற்றொரு நோக்கமாகும் என்று தொழிலாளர் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05