வணிகம்
SLT-MOBITEL’s mCash இலங்கையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புரட்சியை ஏற்படுத்துவதில் 11 வருட பூர்த்தியை கொண்டாடுகின்றது

Jan 3, 2025 - 12:00 PM -

0

SLT-MOBITEL’s mCash இலங்கையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளில் புரட்சியை ஏற்படுத்துவதில் 11 வருட பூர்த்தியை கொண்டாடுகின்றது

SLT-MOBITEL இன் முன்னணி மொபைல் பணக் கட்டமைப்பான mCash, இலங்கையில் நவீன டிஜிட்டல் கொடுப்பனவு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதில் பதினொரு வருட பூர்த்தியை கொண்டாடுகின்றது. 2013 இல் ஸ்தாபிக்கப்பட்டது முதல், இலங்கையின் நிதியயில் கட்டமைப்பில் புரட்சிகரமான மாற்றத்தை mCash ஏற்படுத்தியுள்ளதுடன், நிதிசார் உள்ளடக்கத்துக்கு ஆதரவளித்து, பணப்புழக்கமில்லாத எதிர்காலத்தை நோக்கி தேசத்தை வழிநடத்திய வண்ணமுள்ளது.

மொபைல் பணப் புழக்கத்தில் குறிப்பிடத்தக்களவு சந்தைப் பங்கினை கொண்டுள்ள mCash, 25க்கும் அதிகமான மொபைல் கொடுப்பனவு appகள், 20க்கும் அதிகமான வங்கிகள் மற்றும் இரு அங்கீகாரம் பெற்ற மொபைல் பண வசதியளிக்கும் நிறுவனங்கள் அடங்கலான இலங்கையின் போட்டிகரமான நிதித்தொழினுட்பத் துறையில் முன்னோடியாக அமைந்துள்ளது. மேலும், கடந்த தசாப்த காலப்பகுதியில், mCash இனால் 100க்கும் அதிகமான கட்டணப் பட்டியல் கொடுப்பனவு பங்காளர்கள் மற்றும் 20,000+ க்கும் அதிகமான விற்பனை நிலைய பங்காண்மைகள் போன்றவற்றை ஏற்படுத்தி, நாடு முழுவதிலும் ஒப்பற்ற நிதிசார் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு வசதியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு தசாப்த காலப்பகுதிக்கு அதிகமான வெற்றிகரமான செயற்பாடுகளை பிரதிபலிக்கும் வகையில் mCash, இலங்கையில் டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் புத்தாக்கத்தை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளது. தொடர்ச்சியான மேம்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய தீர்வுகளினூடாக முற்றிலும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட நிதிக் கட்டமைப்பை கொண்ட தேசத்தை உருவாக்க mCash உறுதிபூண்டுள்ளதுடன், நிதிசார் சுதந்திரத்தை நோக்கிய பயணத்திற்கு மில்லியன் கணக்கான இலங்கையர்களுக்கு வலுவூட்டும். டிஜிட்டல் கடன்கள் முதல் இணைந்த வர்த்தகநாமம் பொறிக்கப்பட்ட கிரெடிட் கார்ட்கள் மற்றும் காப்புறுதித் தீர்வுகள் போன்றவற்றுடன் mCash’ன் தீர்வுகள், தனிநபர் மற்றும் வியாபார வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளுக்கு பொருத்தமான சேவைகள் வழங்கப்படுவதுடன், நம்பிக்கையை வென்ற நிதித்தொழினுட்ப பங்காளராகவும் அமைந்துள்ளது. mCash இன் தயாரிப்பு பிரிவு, நுகர்வோருக்கும், வியாபாரங்களுக்கும் பரந்தளவு மற்றும் புத்தாக்கமான நிதிச் சேவைகளினூடாக, தொடர்ந்தும் ஒப்பற்ற சௌகரியத்தை வழங்குகின்றது. மொபைல் money wallet களினூடாக நுகர்வோர் ஒப்பற்ற கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகள், மொபைல் ரீலோட்கள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் LankaQR கொடுப்பனவுகள் போன்றவற்றை பாதுகாப்பான மற்றும் பாவனைக்கு நட்பான மொபைல் அப்ளிகேஷனில் பெற்றுக் கொள்ள முடியும்.

கட்டமைப்பின் திரட்டல் நிர்வாகம் மற்றும் கட்டணப்பட்டியல் பகிர்வு ஆற்றல்கள் நாடு முழுவதிலும் 40,000 பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. பரந்த வலையமைப்பினூடாக, பல்வேறு துறைகளிலிருந்து சுமூகமான கொடுப்பனவு திரட்டல்கள் உறுதி செய்யப்படுவதுடன், அதில் அத்தியாவசிய சேவை வழங்குநர்கள், தொலைத்தொடர்பாடல் சேவைகள், காப்புறுதி நிறுவனங்கள், லீசிங் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகள் போன்றன அடங்கியுள்ளன.

அங்கீகாரம் பெற்ற LankaQR சேவை வழங்குநர் எனும் வகையில், mCash இனால் கொடுப்பனவு கட்டமைப்புகள் மாற்றியமைக்கப்படுவதுடன், சகல அளவுகளையும் சேர்ந்த விற்பனை நிலையங்களுக்கும் வலுவூட்டப்படுகின்றது. mCash’இன் QR-அடிப்படையிலான கொடுப்பனவு தீர்வுகள், ஒன்லைன் மற்றும் விற்பனை நிலைய கொடுக்கல் வாங்கல்களுக்கு ஆதரவளிக்கப்படுவதுடன், வியாபாரங்கள் மற்றும் நுகர்வோருக்கு நெகிழ்ச்சித்தன்மை மற்றும் சௌகரியத்தை வழங்குகின்றது.

முக்கியமாக, mCash இன் முகவர் வங்கியியல் மாதிரி, நிதியியல் உள்ளடக்கதை பின்தங்கிய பகுதிகளிலும் வழங்குகின்றது. mCash அங்கீகாரம் பெற்ற பகுதிகளினூடாக, வாடிக்கையாளர்களுக்கு அத்தியாவசிய வங்கியியல் சேவைகளான பண வைப்புகள், மீளப் பெறல்கள், கிரெடிட் கார்ட் மீளச் செலுத்தல்கள் மற்றும் கடன் செலுத்தல்கள் போன்றவற்றை மேற்கொள்ள முடிவதால், நிதிசார் அணுகல் இடைவெளிகள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், சர்வதேச பணப் பரிமாற்ற செயற்பாட்டாளர்களுடன் mCash மூலோபாய பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளமையால், வெளிநாட்டு பண அனுப்புகைகளை மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகின்றது. கட்டமைப்பின் மொபைல் பண உட்கட்டமைப்பை பயன்படுத்தி mCash இனால் குறைந்த செலவில் வெளிநாடுகளில் பண அனுப்பும் தீர்வுகள் வழங்கப்படுகின்றது. இது பணத்தை அனுப்புவோருக்கும், பெறுவோருக்கும் அனுகூலத்தை சேர்க்கின்றது.

டிஜிட்டல் புத்தாக்கத்தை நோக்கிய mCash இன் பயணத்துக்கு தொடர்ச்சியாக பல கௌரவிப்புகள் கிடைத்துள்ளன. குறிப்பாக, அண்மையில் நடைபெற்ற Asian FinTech Academy Awards 2023 நிகழ்வில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் பண வசூலிப்புகளில் சிறந்த புத்தாக்கங்களுக்கான விருது, Brand Finance மற்றும் LMD இனால் 2023 ஆம் ஆண்டின் 3ஆவது மிகவும் விரும்பப்படும் நிதிப் பரிமாற்றங்களுக்கான வர்த்தக நாம கௌரவிப்பு மற்றும் SLIM வர்த்தக நாம சிறப்பு 2019 விருதுகள் வழங்கலில் ஆண்டின் சிறந்த ஒன்லைன் வர்த்தக நாமத்துக்கான தங்க விருது போன்றன அடங்கியிருந்தன.

ஆரம்பிக்கப்பட்டது முதல், mCash குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி மற்றும் சந்தை ஊடுருவலை வெளிப்படுத்தியுள்ளது. புரள்வு பெறுமதி ரூ. 1 ட்ரில்லியனை கடந்துள்ளதுடன், பணப்பரிமாற்ற எண்ணிக்கை 200 மில்லியனை விட அதிகமானதாக அமைந்துள்ளது. மூலோபாய கைகோர்ப்புகளினூடாக, நிறுவனம் உறுதியான கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், 100 வியாபார பங்காண்மைகள் கொண்டுள்ளதுடன், 20,000 க்கும் அதிகமான விற்பனை நிலை பங்காண்மை வலையமைப்பையும் கொண்டுள்ளது. மேலதிக தகவல்களுக்கு பார்வையிடவும் www.sltmobitel.lk/mcash

 
Comments
0

MOST READ
01
02
03
04
05