Jan 3, 2025 - 12:08 PM -
0
ஆரம்ப காலத்திலிருந்தே, பல விடயங்கள் வாய்வழி பிரசாரங்களால் பிரபலமாகியிருக்கின்றன. சிறு வணிகங்கள் பற்றி மக்கள் மத்தியில் பிரபலம் அடைய இவை காரணமாக இருந்தன. நுகர்வோருக்கு வணிகத்துடன் தொடர்பு கொள்ள வழிவகை செய்யும் நம்பகமான நண்பர் அல்லது அயலவரின் பரிந்துரை இன்று டிஜிட்டல் தளத்திற்கு மாறியுள்ளது. அதன் ஒரு தனித்துவமான பகுதியாக, TikTok இந்த வகையான சிறிய அளவிலான வணிகத்தை சில வினாடிகளில் மில்லியன் கணக்கான மக்களுக்கு விளம்பரப்படுத்த முடிந்தது. இது வாடிக்கையாளருக்கு சரியான அறிமுகத்தை அளிக்கிறது.
The Vegan Kitchen by Sulo மற்றும் Burnt Orange Media போன்ற வணிகங்களைப் பொறுத்தமட்டில் TikTok அந்த வணிகங்களை வெற்றிகரமாக்குவதற்கான சிறந்த வழியாகும். அது ஒரு சமூக ஊடக தளமாகப் மட்டுமல்லாமல், சிறு வணிகங்கள் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பை உருவாக்கும் நவீன பிரசார ஊடகமாகவும் குறிப்பிடப்பட முடியும்.
வணிகங்களின் பிரசாரத்தை மேம்படுத்தும் Burnt Orange Media Burnt Orange Media வின் ஸ்தாபகர் அம்ரா ஒரு தனித்துவ சந்தைப்படுத்தல் வல்லுநர் ஆவார். அளவுகளில் மட்டுமல்லாமல் வர்த்தகநாமங்களை பிரபலப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அவரது மிகச்சிறந்த திட்டமாக கொழும்பில் உள்ள comfy & ozy cafe ஐ குறிப்பிடலாம். அங்கு இருந்த கவர்ச்சிகரமான சூழல், சைவ உணவுகள் மற்றும் வாசகர்களுக்கு ஏற்ற இடம் பற்றி பலர் அறிந்திருந்தாலும் அந்த உணவகத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது மிகவும் கடினமாக இருந்தது.
அந்த நேரத்தில் TikTok தளத்தின் மீது நம்பிக்கை வைத்த அம்ரா, உணவகத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் கவர்ச்சிகரமான படைப்புகளை வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தார். அப்போது உணவு தட்டுகள் அல்லது இடத்தின் அலங்காரம் பற்றி வெளிப்படுத்துவதை விட வாசிக்க விரும்பும், அசைவ உணவு இல்லாத ஒரு உணவை அனுபவிக்கவும், அமைதியான இடத்தில் ஓய்வெடுக்க விரும்பும் மக்களுக்கு அந்த இடத்தின் சிறப்பை தெரிவிக்கவும் அவர் நடவடிக்கை எடுத்தார்.
அதன் உடனடி பலனாக, ஒரு காணொளி மூலம் 120,000 க்கும் அதிகமான பயனர்கள் பக்கம் அந்தச் செய்தியை கொண்டு செல்ல முடிந்தது. காணொளியின் காட்சிகள் மட்டுமல்ல, சரியான பார்வையாளர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பு காரணமாக இந்த வெற்றியை அடைய முடிந்ததாக அம்ரா இதுதொடர்பில் கூறியிருந்தார்.
உணவகத்தில் இருக்கும் தனித்துவமான அம்சங்களைக் காண்பிப்பததன் மூலம் தேவையுடைய நபர்களுக்கு அம்ராவால் தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. இங்கு வழங்கப்பட்ட செய்தி, ஆரம்பத்தில் காணொளியைப் பார்ப்பது குறைவாக இருந்தாலும், காலப்போக்கில் சமீப்பத்திய algorithm மூலமாக அதை மேலும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதேயாகும்.
காதல் கதையை ஒரு வர்த்தகநாம கதையாக மாற்றிய The Vegan Kitchen by Sulo 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Sulos journey with The Vegan Kitchen by Solo ஒரு வணிகம் மட்டுமல்லாமல் அவரது காதல் கதையையும் பிரதிபலிக்கிறது. அவரது கணவர் சைவ உணவு உண்பவர் (Non-Vegetarian). அதனால் அவருக்காக சைவ உணவுகளை தயார் செய்யவும் மற்றும் இனிப்புகளை வகைகளை செய்து கொடுத்தார். மிகச் சிறியதாக ஆரம்பித்து பின்னர் ஒரு வியாபாரமாக மாறி நண்பர்களின் ஊக்கத்துடன் வெற்றிகரமாக முன்னேறியது.
இன்றைய தொழில்நுட்ப உலகில் ஒரு தயாரிப்பு மட்டுமே இருந்தால் போதுமானதல்ல. அதனை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்கும் ஊடகமும் இருக்க வேண்டும். Sulo இங்கு சந்தித்த சவாலும் அதுவாகும். TikTok தளத்தில் அவரது படைப்புகளின் காணொளிகள் வெளியிடப்பட்டாலும், கர்ப்ப காலத்தில் சமூக ஊடகங்களில் இருந்து அவருக்கு விலகி இருக்க வேண்டியிருந்தது.
பின்னர் கொழும்பில் நடைபெற்ற TikTok SMB கருத்தரங்கில் பங்குபற்றிய Sulo அங்கு பல விடயங்களைக் கற்றுக்கொண்டார். அந்த அறிவுடன் TikTok இல் மற்றுமொரு முயற்சியை மேற்கொண்டார். தனது சைவ உணவுகளைக் காட்சிப்படுத்தி ஒரு காணொளியைப் பகிர்ந்தார். மிகக் குறுகிய காலத்தில் 500 பார்வைகளுடன் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், அவருக்கு நேர்மறையான கருத்துக்கள் கிடைப்பதற்கும் இது காரணமாயிற்று.
அவ்வாறு தான் அவர் தனது வியாபாரத்திற்கு பங்களிப்புச் செய்தார். குறித்த கருத்தரங்கின் மூலம் பெற்ற அறிவு இந்த வெற்றிக்கு காரணமானது என்று அவர் கூறுகிறார். அதனால் கருத்தரங்கிற்கு அதிகமான ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு பங்கேற்கும் படி அவர் கேட்டுக்கொண்டார்.
வாய்மொழி பிரச்சாரம் ஒரு புதிய युகத்திற்கு சிறு அளவிலான வணிகங்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த TikTok வல்லமை பெற்றுள்ளது. அதன் உள்ளடக்கம் மற்றும் தனித்துவமான அணுகுமுறை காரணமாக, வணிகங்கள் பக்கம் சார்ந்த பல்வேறு விளம்பர பிரசாரங்கள் போல் அல்லாமல் சரியான மற்றும் உண்மையான தகவல்களை மட்டுமே பயனர்களுக்கு வழங்கி நம்பகத்தன்மையும் அதிகரிக்கிறது.
வாடிக்கையாளர் உறவுகளில் ஒரு காலத்தில் மிகவும் மெதுவாக இருக்கும் உள்ளடக்கம் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் உலகளாவிய நிகழ்வாக மாறுவதை இந்தத் தளத்தில் தடுக்க இயலாது. சிறு அளவிலான வணிகங்களின் வளர்ச்சிக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும்.