Jan 3, 2025 - 02:53 PM -
0
வீதிகளில் பயணிக்கும் உயிர்களைக் காப்பாற்றும் அதே வேளையில் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன், நேற்று (2) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய விசேட போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளார்.
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற புதிய அரசின் கொள்கையின்படி செயல்படுத்தப்பட்டு வரும் 'க்ளீன் ஸ்ரீலங்கா' திட்டத்துடன் இணைந்தே இது நடக்கிறது.
பல்வேறு விதமான வாகன ஒலிகள், அதக சத்தத்தில் ஒலி எழுப்புதல், ஒலி எழுப்பும் சைலன்சர்கள் பொருத்துதல், விபத்துக்கள் மற்றும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் வண்ணங்கள் கொணட விளக்குகளை பொருத்துதல், சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்கள் என்பன தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது.
இதன்படி, ஒவ்வொரு பொலிஸ் அதிகார பிரிவிலும் 3 மணித்தியாலங்களுக்கு ஒருமுறை குறித்த 2 நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொது போக்குவரத்து சேவை வாகனங்களை பரிசோதிக்கும் போது பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் செயற்படுமாறும் பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.