Jan 3, 2025 - 03:02 PM -
0
புது வருடப்பிறப்பில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் நேற்று (02) தமது பணிகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்தனர்.
இதன் போது நாளாந்தம் தேயிலை கொழுந்து பறிக்கும் தேயிலை மரங்களுக்கு மஞ்சள் நீர் தெளித்து தேயிலை மரங்களுக்கு விசேட பூஜைகளையும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் முன்னெடுத்தனர்.
அந்த வகையில் மடுல்சீம பெருந்தோட்ட தேயிலை பயிர்செய்கை நிறுவனத்திற்கு சொந்தமான பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு மற்றும் எல்பட ஆகிய தோட்டபகுதியில் நேற்று விஷேட பூஜைகள் முன்னெடுக்கப்பட்டது.
--