Jan 3, 2025 - 04:50 PM -
0
சீகிரிய பிரதேசத்தில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கலந்துரையாடல் இன்று (03) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் நடைபெற்றது.
சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், வன பாதுகாப்பு திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, தம்புள்ளை பிரதேச செயலகம், மத்திய கலாசார நிதியம், தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
இக்கலந்துரையாடலில், அனுமதிச்சீட்டு வரிசையில் நீண்ட நேரம் நிற்பது, முதலுதவி நிலையங்கள் இல்லாமை, போதிய நீர் வசதியின்மை, குளவி கொட்டினால் பாதுகாப்பு போன்ற 15 விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், ஒவ்வொரு நாளும் 11,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாகவும், அடுத்த வருடம் 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி ருவன் ரணசிங்க தெரிவித்தார்.
இதன் காரணமாக சுற்றுலாத்துறையை தேசிய நலன் கருதி வெற்றியடைய அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

