Jan 3, 2025 - 05:48 PM -
0
இலங்கையின் ஆயுள் காப்புறுதி சந்தையில் முன்னணியில் திகழும் செலிங்கோ லைஃப் நிறுவனமானது பல விருதுகளை பெற்ற நிலையில் 2024 ஆம் ஆண்டினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, இதற்கிணங்க நிதியியல் அறிக்கையிடலில் 11 விருதுகள் மற்றும் வர்த்தக நாம சிறப்பிற்காக 2 விருதுகள் என மொத்தமாக 13 விருதுகளை வென்றுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான நிறுவனத்தின் வருடாந்த அறிக்கையானது நான்கு மதிப்புமிக்க உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளான CMA ஸ்ரீலங்கா, CA ஸ்ரீலங்கா, தெற்காசிய கணக்காளர்கள் கூட்டமைப்பு (SAFA) மற்றும் MerComm Inc. ஆகியவற்றிடமிருந்து விருதுகளை பெற்றது. அத்துடன் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ARC விருதுகளையும் வென்றுள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான செலிங்கோ லைஃப்பின் ஒருங்கிணைந்த வருடாந்த அறிக்கையானது, 2024 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் CMA சிறப்பு விருதுகளில் இலங்கையின் சிறந்த 10 ஒருங்கிணைந்த அறிக்கைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது மற்றும் காப்புறுதி பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. CMA ஸ்ரீலங்கா என்பது தேசிய தொழில்சார் முகாமைத்துவ கணக்கியல் நிறுவனமாகும்.
வருடாந்த அறிக்கையானது காப்புறுதி பிரிவில் வெள்ளி விருதையும், கூட்டுத்தாபன ஆளுகை வெளிப்படுத்தலுக்கான வெண்கல விருதையும், நிலைத்தன்மை அறிக்கையிடல், ஒருங்கிணைந்த அறிக்கையிடல் மற்றும் டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கும் அறிக்கையிடலுக்கான அங்கீகாரம் ஆகியவற்றில் மூன்று சான்றிதழ்களையும் தற்போது TAGS விருதுகள் என குறிக்கப்படும் CA Sri Lanka விருதுகளின் 2024 ஆம் ஆண்டுக்கான பதிப்பில் வென்றுள்ளது.
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ARC விருதுகளில், செலிங்கோ லைஃப், வடிவமைப்பு மற்றும் வரைகலை க்காக தங்கத்தையும், எழுத்துப்படிவம் மற்றும் எழுதுதல் மற்றும் சிறப்பு ஆண்டு அறிக்கை ஆகியவற்றிற்காக இரண்டு வெண்கல விருதுகளையும் வென்றது.
செலிங்கோ லைஃப் இன் மற்றுமொரு குறிப்பிடத்தக்க ஆண்டு இறுதிச் சாதனையானது, தெற்காசியக் கணக்காளர் கூட்டமைப்பிலிருந்து ஆயுள் காப்புறுதி பிரிவில் வழங்கப்பட்ட சிறந்த வருடாந்த அறிக்கைக்கான SAFA வெண்கல விருதாகும். இந்த குறிப்பிடத்தக்க விருதுகள் குறித்து செலிங்கோ லைஃப் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு துஷார ரணசிங்க கருத்துத் தெரிவிக்கையில், எமது வருடாந்த அறிக்கை மற்றும் வர்த்தகத்தின் அனைத்து அம்சங்களிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் விரிவான வெளிப்படுத்தலுக்கான எமது அர்ப்பணிப்புக்கு நாம் வழங்கிய முக்கியத்துவத்தை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. எங்களுடைய அனைத்து பங்குதாரர்களும் இந்த விருதுகளுக்கு மதிப்பளிப்பார்கள், ஏனெனில் அவை எங்களின் வருடாந்த அறிக்கையின் நுண்ணிய ஆய்வு மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைத் தரங்களுக்கு இணங்குவதை அடிப்படையாகக் கொண்டது. வருடாந்த அறிக்கையானது நிறுவனம் வென்ற விருதுகளின் வகைப்படுத்தலின் மூலம் கவனத்தை ஈர்த்தது, செலிங்கோ லைஃப் ஆனது இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (SLIM) 2024 வர்த்தக நாம சிறப்பு விருதுகளில் ஆண்டின் சிறந்த உள்நாட்டு வர்த்தக நாமதுக்கான வெள்ளி விருதையும், ஆண்டின் சிறந்த சேவை வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருதையும் வென்றதன் மூலம் நாட்டின் வலிமையான வர்த்தக நாமங்களில் ஒன்றாக அதன் நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (CIMA) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம் என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.
செலிங்கோ லைஃப் 36 வருடங்களில் 20 வருடங்களாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகிறது. அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன.