Jan 4, 2025 - 04:06 PM -
0
புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை வழங்கிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, சிறைச்சாலையில் உள்ள சில கைதிகளுக்கு விசேட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பு நேற்று முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பிலும், சந்தேகநபர்களின் கைகளில் இரும்புச் சங்கிலியில் கைவிலங்குகள் போடப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார்.