Jan 5, 2025 - 09:42 AM -
0
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நியூசிலாந்தின் வெலிங்டன் மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதற்கமைய, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 43.4 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக அவிஸ்க பெர்ணான்டோ 56 ஓட்டங்களையும், சனித் லியனகே 36 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் மெட் ஹென்ரி 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
அதற்கமைய, 179 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 26.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
நியூசிலாந்து அணி சார்பாக வில் யங் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களையும் ரச்சின் ரவீந்திரா 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் ஊடாக 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 1 - 0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.