வடக்கு
யாழில் கஞ்சாவுடன் 03 இளைஞர்கள் கைது!

Jan 5, 2025 - 01:15 PM -

0

யாழில் கஞ்சாவுடன் 03 இளைஞர்கள் கைது!

வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சாவுடன் மூன்று இளைஞர்கள் நேற்று (04) கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி மு.உதயானந்தன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29, 34 மற்றும் 23 வயதுடையவர்கள். அவர்களில் ஒருவர் இரு தினங்களுக்கு முன்னர் அதே பொலிஸாரால் அதே பகுதியில் வைத்து கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05