Jan 6, 2025 - 10:12 AM -
0
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற அவுஸ்திரேலிய அணி 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதன் மூலம் இந்திய அணியின் நீண்ட கால சாதனை ஒன்றை அவுஸ்திரேலியா முறியடித்து இருக்கிறது.
அதிக முறை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடத்தும் கிரிக்கெட் தொடர்களின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி என்ற இமாலய சாதனையை ஆஸ்திரேலியா செய்துள்ளது. இதற்கு முன் இந்தியா 13 முறை ஐசிசி இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறி இருந்தது.
இதற்கு முன் அவுஸ்திரேலியாவும் 13 முறை ஐசிசி போட்டிகளுக்கு முன்னேறி இருந்தது. தற்போது 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு அவுஸ்திரேலியா முன்னேறியதன் மூலம் இந்தியாவை முந்தி அதிக முறை ஐசிசி இறுதி போட்டிகளுக்கு முன்னேறிய அணி என்ற சாதனையை செய்து இருக்கிறது.
தற்போது அவுஸ்திரேலிய அணி 14 முறை ஐசிசி இறுதி போட்டிகளுக்கு முன்னேறி உள்ளது. எந்தெந்த தொடர்களில் எத்தனை முறை ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் இறுதி போட்டிகளுக்கு முன்னேறி உள்ளன என்பது பற்றி பார்க்கலாம். அவுஸ்திரேலியா இரண்டு டி20 உலக கிண்ண மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிகளுக்கு முன்னேறி உள்ளது
.
அவுஸ்திரேலியா அணி ஒரு நாள் போட்டி உலக கோப்பை தொடர்களுக்கு எட்டு முறை முன்னேறி உள்ளது. அத்துடன் இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளுக்கும் முன்னேறி உள்ளது. இதுவரை 13 முறை அந்த அணி ஐசிசி இறுதிப் போட்டிகளில் ஆடி இருக்கும் நிலையில், அதில் பத்து முறை கிண்ணத்தை வென்று இருக்கிறது.
தற்போது 14 ஆவது முறையாக 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. அதிலும் வெற்றி பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை நான்கு முறை ஒருநாள் போட்டி உலகக் கிண்ண இறுதி போட்டிகளுக்கு முன்னேறி உள்ளது.
மூன்று முறை டி20 உலகக் கிண்ண இறுதி போட்டிகளுக்கு முன்னேறி இருந்தது. இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும், நான்கு முறை சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டிக்கும் இந்திய அணி முன்னேறி இருந்தது. இந்த 13 வாய்ப்புகளில் இந்திய அணி இரண்டு டி20 உலக கிண்ணங்களையும், இரண்டு ஒருநாள் போட்டி உலக கிண்ணங்களையும், ஒரு சாம்பியன்ஸ் டிராபி கிண்ணத்தை மட்டுமே வென்று உள்ளது.