வடக்கு
விளைச்சல் தொடர்பில் விவசாயிகள் கவலை

Jan 6, 2025 - 03:45 PM -

0

விளைச்சல் தொடர்பில் விவசாயிகள் கவலை

கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை 70,000 இற்கு மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் வெள்ள அனர்த்தத்தினால் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.

 

தற்போது கபில நிறத்தத்தி மற்றும் மடிச்சுக்கட்டி நோய்த்தாக்கம் அதிகரித்த நிலையில் நெல்லு பூரணமாக முதிர்வடையாத நிலையில் அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

 

விவசாயிகள் எஞ்சி இருக்கின்ற நெல்லையாவது காப்பாற்றும் நோக்குடன் தாம் அறுவடை ஆரம்பித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த போகங்களிலும் நோய்த்தாக்கம் காரணமாக விளைச்சல் குறைவடைந்த நிலையில் இம்முறையும் தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

கடந்த கால போகத்திலும் ஒரு ஏக்கருக்கு 5 - 8 மூடைகளே அறுவடை செய்ய முடிந்ததாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05