Header Logo
Vallibel FD
Selan Bank
வணிகம்
இலங்கையின் சிறந்த சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் வழங்குநராக People’s Excellency விருதை வென்றுள்ள ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம்

Jan 7, 2025 - 05:20 AM

இலங்கையின் சிறந்த சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் வழங்குநராக People’s Excellency விருதை வென்றுள்ள ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம்
Mobitel Inner 1278

சுகாதாரப் பராமரிப்பு சேவைகள் துறையில் புகழ்மிக்க நிறுவனமாக திகழும் ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் People’s Excellency விழாவில் 2024 ஆம் ஆண்டின் இலங்கையின் சிறந்த சுகாதாரப் பராமரிப்பு சேவை வழங்குநர் என்ற விருதை வென்றுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் வெகு விமரிசையாக நடைபெற்ற மேற்படி விருது விழாவில் ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் சார்பாக அதன் நடவடிக்கை முகாமையாளர்களான திருமதி குஷிணி குமாரசிங்க மற்றும் செல்வி ருவந்தி பர்னேந்து மேற்படி விருதை பெற்று கொண்டனர்.

2007 ஆம் ஆண்டில் 25 பணியாளர்களுடன் தொடங்கப்பட்ட ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனம் தற்பொழுது இலங்கையின் மிகப் பெரிய சுகாதாரப் பராமரிப்புச் சேவை வழங்குநராக திகழ்கிறது.

மஹரகம,கல்சிஸ்சை, கடுவளை, ஹங்வெல்ல ஆகிய பகுதிகளிலும் ஐக்கிய இராச்சியத்தின் லண்டன் மாநகரிலும் சொகுசு சுகாதாரப் பராமரிப்புச் சேவை நிலையங்களை நடாத்தி வரும் ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனத்தில் மருத்துவர்கள், தாதியர் உத்தியோகத்தர்கள், தாதியர் மற்றும் இதர சுகாதார வல்லுநர்கள் என 1200 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் சேவையாற்றுவதோடு நவீன வசதிகளை கொண்ட இந் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையினை வழங்கி வருகிறது. 2025 ஆம் ஆண்டு முடிவில் 50,000 இற்கு மேற்பட்டோருக்கு சுகாதாரப் பராமரிப்பு சேவையினை வழங்குவதே இந் நிறுவனத்தின் நோக்கமாகும்.

இலங்கை தனியார் சுகாதாரச் சேவைகள் ஒழுங்குபடுத்தல் பேரவையின் அங்கீகாரத்தை பெற்ற ரோயல் நர்சிங் ஹோம் நிறுவனத்தின் தாதியர் சேவை வசதிகள் மற்றும் அம்புலன்ஸ் சேவைகளும் சுகாதார அமைச்சின் தர நியமங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றன. உள்நாட்டு, வெளிநாட்டு விருதுகளையும் தரச் சான்றிதழ்களையும் வென்றுள்ள மேற்படி நிறுவனம் ISO 9001-2015 எனும் சர்வதேச தரச் சான்றிதழை வென்ற இலங்கையின் ஒரே சுகாதார பராமரிப்புச் சேவை நிறுவனமாகும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

முழு நாட்டிற்கும் முக்கியமானதொன்று!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

Mobitel 1278