Jan 7, 2025 - 02:21 PM -
0
புத்தளம் அனுராதபுரம் பிரதான வீதியின் சிராம்பியடி பகுதியில் நேற்று (06) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் - கருவலகஸ்வெவ 8 ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
--