சினிமா
சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

Jan 7, 2025 - 05:18 PM -

0

சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் சிவகார்த்திகேயன். அவர் சமீபத்தில் நடித்து வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கினார். திரைப்படம் உலகளவில் உள்ள மக்களால் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் உலகளவில் 350 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

 

இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK 23 திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

அதைத்தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கும் SK 25 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

 

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

 

அதில் அவர் கூறியதாவது,

 

என்னைப்போல ஒரு சாமானியன் திரைத்துறையில் வருவது மற்றும் அதில் வந்து சாதிப்பது ஒரு தரப்பு மக்கள் அதை வரவேற்றாலும். ஆனால் சிலர் இப்படி ஒருவன் திரைத்துறைக்கு வருவதை விரும்பவில்லை.

 

அவர்கள் நீ யார்? நீ ஏன் இங்கு வந்தாய்? உனக்கு இங்கு என்ன வேலை ? என சிலர் என் முகம் எதிரே கேள்வி கேட்டுள்ளனர். நான் இதை பலமுறை கடந்து வந்துள்ளேன். நான் அவர்கள் கூறுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு சிரித்துவிட்டு வந்துவிடுவேன்.

 

எனது வெற்றியைக் கூட அவர்களுக்கு பதிலாக நான் அளிக்க விரும்பவில்லை. அதே மாதிரி சோஷியல் மீடியாவில் சிலர் என் திரைப்படம் தோற்றால் அதற்கு காரணம் என்னை கூறுவார்கள் அதேப்படம் வெற்றியடைந்தால் மற்றொருவரை பாராட்டுவர் என கூறியுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05