சினிமா
கூடுதலாக 20 நிமிட காட்சிகளுடன் மீண்டும் திரைகளில் வெளியாகும் 'புஷ்பா 2'

Jan 7, 2025 - 08:21 PM -

0

கூடுதலாக 20 நிமிட காட்சிகளுடன் மீண்டும் திரைகளில் வெளியாகும் 'புஷ்பா 2'

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் திகதி வெளியான படம் 'புஷ்பா 2'.


இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு பின்னணி இசை அமைத்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது.


இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலக அளவில் ரூ.1,831 கோடிக்கும் (இந்திய பெறுமதி) அதிகமாக வசூல் செய்துள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படத்தின் வசூலான ரூ.1790 கோடியை கடந்து சாதனை படைத்தது.


இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 11ஆம் திகதி திரையரங்குகளில் மீண்டும் வெளியாக உள்ளது. அதாவது, 3 மணி 20 நிமிடம் கொண்ட இப்படம், கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டு 3 மணிநேரம் 40 நிமிடமாக வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

May be an image of 1 person and text
Comments
0

MOST READ
01
02
03
04
05