வடக்கு
நபரொருவர் மீது தாக்குதல் - கைதான 5 பேருக்கு விளக்கமறியல்

Jan 7, 2025 - 09:20 PM -

0

நபரொருவர் மீது தாக்குதல் - கைதான 5 பேருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைதான ஐந்து சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண மேலதிக நீதிவான் நீதிமன்றம் இன்றைய தினம் (7) உத்தரவிட்டது.


கடந்த வாரம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகமொன்றுக்கு வந்த ஒருவர், அப்பகுதியில் நிலத்தில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கியுள்ளார். சில தினங்களுக்கு பின்னர் மேற்படி நகை உரியவர்களிடம் வழங்கப்பட்டதா என வெதுப்பகத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் வெதுப்பகத்தில் இருந்த இளைஞர் குழு குறித்த நபரை கட்டிவைத்து தாக்கி காணொளியையும் வெளியிட்டது. குறித்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


கைதான ஜவரும் யாழ்ப்பாண மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்ட நிலையில் ஜனவரி 15 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதிவான் லெனின்குமார் உத்தரவிட்டார்.


சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05