Jan 7, 2025 - 10:59 PM -
0
அமெரிக்கா எதிர்கொண்டுள்ள மோசமான பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவின் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன, மக்கள் பயணம் செய்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் மற்றும் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
ஏழு அமெரிக்க மாகாணங்கள் அவசர நிலைகளை அறிவித்துள்ளன. அவை மேரிலாந்து, விர்ஜீனியா, மேற்கு விர்ஜீனியா, கான்சஸ், மிசோரி, கென்டக்கி மற்றும் ஆர்கன்சா ஆகும்.
வட துருவத்தைச் சுற்றி வரும் குளிர்ந்த காற்றின் துருவச் சுழல் (Polar Vertex) காரணமாக இந்த தீவிர வானிலை மாற்றம் ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
2,300க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன, சுமார் 9,000 விமானங்கள் தாமதமாகியுள்ளன.
பனிப்புயலின் பாதையில் உள்ள மாகாணங்களில் வாழும் கிட்டதட்ட 190,000 மக்களுக்கு, செவ்வாய்கிழமை காலை மின்சார சேவை துண்டிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பனிப்பொழிவு குறைந்த பின்னரும், குளிர்ந்த ஆர்க்டிக் காற்று காரணமாக இன்னும் பல வாரங்களுக்கு நாட்டின் ஒரு பகுதி முழுவதும் பனிக்கட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.