விளையாட்டு
இலங்கை - நியூசிலாந்து போட்டி மழையால் தாமதம்

Jan 8, 2025 - 07:23 AM -

0

இலங்கை - நியூசிலாந்து போட்டி மழையால் தாமதம்

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது.


பகல்-இரவு போட்டியாக இடம்பெறவிருந்த மேற்படி போட்டியானது இலங்கை நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது.


எனினும், மழை காரணமாக நாணய சுழற்சி தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ