செய்திகள்
வவுனியாவில் 113 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்

Jan 8, 2025 - 07:32 AM -

0

வவுனியாவில் 113 பேருக்கு டெங்கு நோய் தாக்கம்

வவுனியா மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 113 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. 

வவுனியா மாவட்டத்தில் மழை காலங்களில் மழை நீரானது டெங்கு நுளம்பு பெருக்கும் வகையில் தேங்கி நிற்காமல் இருப்பதற்காக சுகாதார பரிசோதகர், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.  

எனினும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரை 113 பேர் வவுனியாவில் டெங்கு நோயினால் பாதிப்படைந்தனர்.

 

அதில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 82 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

 

அவர்கள் குணமடைந்து  தற்போது வீடுகளுக்கு சென்றுள்ளனர் எனவும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது. 



 

-வவுனியா தீபன்-

 
 


 

Comments
0

MOST READ