செய்திகள்
வில்பத்து பகுதியில் உயிரிழந்த நிலையில் டொல்பின்கள்!

Jan 8, 2025 - 04:45 PM -

0

வில்பத்து பகுதியில் உயிரிழந்த நிலையில் டொல்பின்கள்!

உயிரிழந்த நிலையில் டொல்பின்கள் பல வில்பத்து தேசிய பூங்கா கடற்பிரதேசத்தில் கொட்டப்பட்டுள்ளதாக மொல்லிக்குளம் பிரதேச பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வனவிலங்கு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


பின்னர் அனுராதபுரம் வனவிலங்கு கால்நடை வைத்திய அலுவலகத்தின் வனவிலங்கு கால்நடை மருத்துவர்களான சந்தன ஜயசிங்க மற்றும் டபிள்யூ. எல். யு. மதுவந்தி ஆகியோர் மீன்களுக்கு பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர்.


அங்கு 11 டொல்பின்கள் இறந்து கிடந்தன, மீன்களின் உடல்களை பரிசோதித்த மருத்துவர்கள், இந்த விலங்குகள் வலையில் சிக்கி, கடற்கரையில் வீசப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் வௌியிட்டனர்.


இது தொடர்பான தகவல்கள் நேற்று (07) புத்தளம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், விலங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகள் பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Comments
0

MOST READ
01
02
03
04
05