Jan 8, 2025 - 05:20 PM -
0
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 16 ஆவது ஆண்டு நினைவு தினத்தையிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (08) ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசிங்கவின் 16 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் காந்தி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவு தூபியில் ஊடகவியலாளர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் இணைந்து புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர்.
--