Jan 8, 2025 - 06:09 PM -
0
இளைஞர்களை ஊக்குவித்து வலுவூட்டும் வகையிலான இலங்கையின் முதன்மையான கல்வி மற்றும் தொழில் கண்காட்சியான EDEX Expo 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி முதல் 19 ஆம்திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் (BMICH), 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை கண்டி சிட்டி சென்டரிலும் (KCC) இடம்பெறவுள்ளது. றோயல் கல்லூரி ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வானது, உயர்கல்வி, தொழில் மேம்பாடு, பயிற்சி மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் பல வாய்ப்புகளை ஒன்றிணைத்து, இலங்கை இளைஞர்கள் உலகளாவிய ரீதியில் போட்டியிடுவதற்கான பாதைகளை வகுத்துள்ளது.
அதன் நீடித்த மரபைக் கொண்டாடும் வகையில், EDEX Expo ஆனது மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் ஆகியோருக்கு ஒரு ஊக்கப் பலகையாக விளங்குகிறது. இலங்கை இளைஞர்களை உலகமயமாக்கப்பட்ட உலகில் வெற்றிபெறச் செய்யும்- எமது நோக்கம் தெளிவாக உள்ளது. EDEX Expo என்பது எப்போதும் ஒரு சாதாரண கண்காட்சியாக அன்றி அதற்கு ஒருபடி மேலாகவே உள்ளது. இது கனவுகள் மற்றும் வாய்ப்புகளுக்கான ஊக்கியாகவும் உள்ளது' என EDEX இன் தலைவர் மஹிந்த கலகெதர தெரிவித்தார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிகழ்வில் 100 இற்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள், 20 முன்னணி முன்னணி நிறுவனங்கள் மற்றும் கனடா மற்றும் மலேசியாவிலிருந்து இரு சர்வதேச அரங்குகளும் இணைந்து கொண்டு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவுள்ளன. நியூசிலாந்து, சீனா, இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள வாய்ப்புகளை மாணவர்கள் ஆராய்ந்து அறிந்து கொள்ளும் வகையில், உள்ளூர் பல்கலைக்கழகங்களும் உயர்கல்விக்கான பல்வேறு வழிகளை முன்வைக்கவுள்ளன.
சமூகப் பங்களிப்பில் தனது வரலாற்றைக் கட்டியெழுப்பும் வகையில், EDEX 365-இன் நெனபஹன முன்முயற்சி ஊடாக டிசம்பர் 2024 இல், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்துடன் இணைந்து புத்தல பிரதேசத்தில் உள்ள 26 பாடசாலைகளுக்கு 4 மில்லியன் ரூபாய் பெறுமதியான புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த முன்முயற்சியானது EDEX இன் கல்வி மற்றும் தொழில்முனைவுக்காக 2025 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்படவுள்ள வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு அவர்களின் திறனை உணர தேவையான மற்றும் அவர்களது அறிவு வளர்ச்சிக்கு தேவையானதை பெற்றுத் தருவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என EDEX திட்டத் தலைவர் சுமேத கருணாரத்ன அவர்கள் தெரிவித்தார். இந்த நிகழ்வானது பங்கேற்பாளர்களின் உயர்ந்த எண்ணங்களை தூண்டுதல், தகவல்களை வழங்குதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகிய முக்கிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது:
சித்துவம் சித்திரப் போட்டிகள்: கற்புல ஆற்றுகை மற்றும் கலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ் டிஜிட்டல் படைப்பாற்றலில் உலகளாவிய போக்குகளைக் காட்டும் AI-உதவி பிரிவொன்று தற்போது உள்ளது.
திங்க் கிறீன் (பசுமை சிந்தனை) முன்முயற்சி: இளைஞர்களிடையே சுற்றுச்சூழல் உணர்வை ஊக்குவிக்கும், நிலைத்தன்மையை செயற்படுத்தும் புதுமை சார்ந்த நகர்ப்புற பசுமைக் கோபுர கருத்திட்டம்.
கல்விசார் களியாட்ட வலயம்: நேரலை உருவப்படம் வரைதல், சிற்பம் செய்தல் மற்றும் STEM அடிப்படையிலான செயல்பாடுகளை உள்ளடக்கிய பொழுதுபோக்கு மற்றும் கற்றல் நடவடிக்கை
தொழில்முனைவோர் வழிகாட்டல்: எதிர்கால வணிகத் தலைவர்களை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அமர்வுகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் வெற்றிக்கான கருவிகளுடன் அவர்களுக்கான அறிவு வளர்ச்சிக்கு தேவையானதை பெற்றுக் கொடுத்தல்.
EDEX Expo, EDEX கேரியர்ஸ் மூலம் வழங்கப்படும் கேரியர் கீ சைக்கோமெட்ரிக் சோதனை உள்ளிட்ட, நடைமுறை தொழில் மேம்பாட்டுக் கருவிகளையும் அறிமுகப்படுத்துகிறது. இந்தச் சோதனை தனிநபர்கள் தங்கள் பலம் மற்றும் ஆர்வங்களுடன் ஒத்துப்போகும் தொழில் முறைகளை அடையாளம் காண உதவுவதுடன், அவர்களது தொழில்முறை பயணங்களை நிறைவேற்றுவதை உறுதி செய்கிறது. தகவல் தொழில்நுட்பம், வங்கியியல், ஊடகம் மற்றும் சமையல் கலைகள் போன்ற தொழில்களில் இலங்கையின் முன்னணி பெருநிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் ஆன்-சைட் நேர்காணல்கள் மற்றும் உடனடி ஆட்சேர்ப்பு வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம் பங்கேற்பாளர்கள் மேலும் பயனடையலாம்.
கொழும்பு எக்ஸ்போ நிகழ்வு, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மேதகு ஆண்ட்ரூ பேட்ரிக் அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுவதுடன், இந்நிகழ்வின் சர்வதேச முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் பிரதம விருந்தினராகவும் கலந்துகொள்வார். இந்நிகழ்வை பிரதமர் அலுவலகம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு, தொழிலாளர் அமைச்சு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு ஆகியவை அங்கீகரித்துள்ளன.
இலங்கை முதலாளிகள் கூட்டமைப்பு, இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இலங்கை தொழில் வழிகாட்டல் சங்கம் ஆகியன இந்த நிகழ்வின் மூலோபாய பங்காளிகளாக விளங்குகின்றன. இந்நிகழ்வானது ESOFT மெட்ரோ கெம்பஸ், APIIT, NSBM கிறீன் யுனிவர்சிட்டி, யுனிவர்சல் கொலேஜ் லங்கா, மோகோ மீடியா அகடமி மற்றும் எடித் கொவான் யுனிவர்சிட்டி ஆகிய ஆகிய நிறுவனங்கள் பிளாட்டினம் அனுசரணை வழங்கியுள்ளதுடன், CINEC கெம்பஸ், அவுஸ்திரேலியன் கொலேஜ் ஒப் பிஸ்னஸ் அன்ட் டெக்னொலஜி, அவுஸ்திரேலியன் சென்டர் ஃபோர் ஹையர் எடியுகேஷன், Curtin யுனிவர்சிட்டி கொழும்பு, லைசியம் கெம்பஸ், SLT - மொபிடெல் நெபியுலா இன்ஸ்டிடியுட் ஒப் டெக்னொலஜி மற்றும் றோயல் இன்ஸ்டிடியுட் கொழும்பு ஆகிய நிறுவனங்கள் கோல்ட் அனுசரணையாளர்களாகவும் ஆதரவு வழங்கியுள்ளனர்.
உத்தியோகபூர்வ வங்கி பங்காளர் சம்பத் வங்கி பிஎல்சி, உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பு பங்காளர் SLT மொபிடெல், அச்சு ஊடக பங்காளர் விஜய நியூஸ் பேப்பர்ஸ் லிமிடெட் மற்றும் இணைய ஊடக பங்காளர் நியூஸ் வயர் மற்றும் எடியு வயர்.
கண்காட்சி கொழும்பில் காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணிவரை மற்றும் கண்டியில் காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணிவரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும். EDEX Expo 2025 ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான ஒரு விரிவான தளமாக அமையும்.
உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் இந்த சிறந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். உலகளாவிய ரீதியில் போட்டித் திறன் கொண்ட ஒரு நிபுணராக மாறுவதற்கான பயணத்தில் ஒன்றிணையவும். EDEX Expo 2025 இன் மாற்றத்தின் ஒரு பகுதியாகுங்கள் மேலதிக விபரங்களுக்கு: 011 3091086, 076 8204975 ஆகிய இலக்கங்களின் ஊடாக EDEX செயலகத்தை தொடர்புகொள்ளவும்.