Jan 8, 2025 - 07:07 PM -
0
கடந்த ஆண்டு சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்தும் இதே நிலையே நீடிக்கிறது.
நேற்று (07) ஆபரணத் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ. 7,215 இற்கும் ஒரூ சவரன் ரூ.57,720 இற்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (08) ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,225 இற்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.57,800 இற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல்,18 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 5 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,965 இற்கும், ஒரு சவரன் தங்கம் ரூ. 47,720 இற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.100 இற்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 100,000 இற்கும் விற்பனை செய்யப்படுகிறது.