Jan 8, 2025 - 07:41 PM -
0
தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை ஹன்சிகா. நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் நல்ல கொழு கொழு என இருந்தவர் இப்போது உடல் எடையை சுத்தமாக குறைத்து ஆளே மாறிவிட்டார்.
சில வருடத்திற்கு முன்பு சோஹெல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஹன்சிகா, திருமணத்திற்கு பிறகும் பிசியாக படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹன்சிகா மற்றும் அவரின் அம்மா மோனா மோத்வானி மீது அவரது சகோதரரின் மனைவியும் சின்னத்திரை நடிகையுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸ் பொலிஸில் புகாரளித்துள்ளார்.
2022 இல் குடும்ப டார்ச்சர் காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து தனியே வாழ்ந்து வரும் நிலையில் ஹன்சிகாவின் நாத்தனார் புகாரளித்தது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.