வடக்கு
பிரபல தவில் வித்துவானின் மகன் உயிரிழப்பு

Jan 9, 2025 - 11:08 AM -

0

பிரபல தவில் வித்துவானின் மகன் உயிரிழப்பு

அச்சுவேலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி வீதி வல்லை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பிரபல தவில் வித்துவானின் மகன் உயிரிழந்துள்ளார்.

 

வல்லைப் பகுதியில் நேற்று (08) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குறித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

யா/ நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும் பிரபல தாவில் வித்துவான் வியஜகுமாரின் புதல்வன் யாழ்ப்பாணத்திலிருந்து  பருத்தித்துறை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வேளை வல்லைப் பகுதியில் மாட்டுடன் மோதி எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.

 

படுகாயமடைந்த இளைஞர் மந்திகை ஆதார வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

 

சம்பவத்தில் பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த பிரபல தவில் வித்துவான்  விஜயகுமார் மணிகண்டன் (வயது 21) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை  அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05