விளையாட்டு
அணியின் கேப்டனாக மீண்டும் கோலி?

Jan 9, 2025 - 11:59 AM -

0

அணியின் கேப்டனாக மீண்டும் கோலி?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா மோசமான பார்ம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த கடைசி டெஸ்டில் தானாக முன்வந்து விலகினார்.

 

இதனால் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணி தலைவர் பொறுப்பை கவனித்தார். சிட்னி டெஸ்டில் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறிய போது, விராட் கோலி பொறுப்பு அணியின் தலைவராக செயல்பட்டார். ரோகித் சர்மா இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவது சந்தேகம் தான். அதனால் புதிய டெஸ்ட அணியின் தலைவரை நியமிக்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

 

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்ஷிப் குறித்து அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவிக்கையில்,

 

ரோகித் சர்மா ஜூன் மாதம் நடக்கும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு செல்லமாட்டார். அவரது இலக்கு அனேகமாக சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியாக இருக்கும். அது முடிந்ததும் ஓய்வு பெற்று விடுவார் என்று நினைக்கிறேன்.

 

இந்திய அணியின் முழு நேர அணி தலைவராக பும்ரா இருக்க முடியுமா என்பது தெரியவில்லை. அது அவருக்கு சவாலானதாக இருக்கும். அதனால் அடுத்த அணி தலைவராக யார் வருவார்? கோலியை மறுபடியும் அணி தலைவராக கொண்டு வர முயற்சிப்பார்களா? என்னை கேட்டால் கோலி மீண்டும் டெஸ்ட் அணி தலைவராக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

இந்தியாவுக்கு இது சவாலான கால கட்டமாகும். மூத்த வீரர்கள் வெளியேறினால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பல திறமையான வீரர்களை உருவாக்கியுள்ளது. அதனால் 1 முதல் 11 ஆவது வரை இந்த வரிசைக்கும் புதிய வீரர்களை கொண்டு வர முடியும். அதற்காக சர்வதேச போட்டியில் அது உடனடியாக வெற்றியை தேடி தரும் என்று அர்த்தம் கிடையாது. இந்திய அணிக்கு இது சற்று சவாலான நேரமாக இருக்கப்போகிறது. ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் அந்த நாட்டு பவுலர்கள் முழு உடல்தகுதியுடன் இருந்தால், நிச்சயம் ஆதிக்கம் செலுத்துவார்கள் என கில்கிறிஸ்ட் கூறினார்.

Comments
0

MOST READ