Jan 10, 2025 - 07:37 AM -
0
9 ஆவது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19 ஆம் திகதி முதல் மார்ச் 9 ஆம் திகதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான அணிகளை வருகிற 12 ஆம் திகதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐசிசி அறிவித்த நிலையில், இந்த வீரர்கள் தேர்வில் மாற்றம் செய்ய பிப்ரவரி 12 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் எம்எஸ் டோனி நியமிக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்கில் வெளியாகி வருகிறது.
2021-ம் ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ணத்திற்கான தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக டோனி நியமிக்கப்பட்டார். அதில் இந்திய அணி கிண்ணத்தை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.