வடக்கு
51 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Jan 10, 2025 - 12:15 PM -

0

51 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (10) காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழராட்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சீவிகே சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.

 

இதன்பொழுது உயிரிழந்த ஒன்பது உறவுகளையும் நினைவு கூறி அமைக்கப்பட்ட நினைவுத்தூபியின் முன் சி.வீ.கே சிவஞானத்தினால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டு அக வணக்கமும் செலுத்தப்பட்டது.

 

இதன் போது வடமாகாண அவைத்தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவருமான சி வி கே சிவஞானம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில், வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரான சுகிர்தன், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் ஆணையாளர் ஆர்னோல்ட், இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05