செய்திகள்
ஐ.தே.கட்சியின் புதிய பொதுச்செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

Jan 10, 2025 - 05:16 PM -

0

ஐ.தே.கட்சியின் புதிய பொதுச்செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தலதா அதுகோரள இன்று (10) காலை தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.


குறித்த நிகழ்வு சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது.


அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி என்பது விசேட அம்சமாகும்.


ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்க மற்றும் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 


 

Comments
0

MOST READ
01
02
03
04
05