வடக்கு
மதவாச்சி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்பு

Jan 10, 2025 - 06:43 PM -

0

மதவாச்சி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்பு

மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல மயானத்திற்கு அருகிலுள்ள குழியில் நேற்று (09) மாலை பெண்ணின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மதவாச்சிப் பொலிசார் தெரிவித்தனர்.

 

உயிரிழந்தவர் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண் ஆவார். இருப்பினும், அவரது சடலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலாடை மற்றும் லெக்கின்ஸ் ஆகிய ஆடைகளை குறித்த பெண் அணிந்துள்ளார். அத்துடன் பெண்ணின் அருகில் இருந்த பையில் இருந்து  கொழும்பில் இருந்து மதவாச்சிக்கு இ.போ.சபை பேருந்தில் பயணித்த பயணச்சீட்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
 
பெண்ணின் உடலில் பல காயங்கள் காணப்பட்டுள்ள நிலையில், இதுவொரு கொலையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 

நீதவானின் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல் அனுராதபுரம் வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

 

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 

--

Comments
0

MOST READ
01
02
03
04
05