Jan 10, 2025 - 07:49 PM -
0
யாழ்ப்பாணத்தில் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்திய நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
அச்சுவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மது போதையில் துவிச்சக்கர வண்டியை செலுத்தி சென்ற சமயம் அச்சுவேலி பொலிஸார் குறித்த நபரை கைது செய்து, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணையின் போது, தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து, நீதிமன்று அந்நபருக்கு 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
--