சினிமா
ஜிம்மில் ரஷ்மிகா காயம் : படப்பிடிப்பு ஒத்திவைப்பு

Jan 12, 2025 - 09:42 AM -

0

ஜிம்மில் ரஷ்மிகா காயம் : படப்பிடிப்பு ஒத்திவைப்பு

நடிகை ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படத்தின் மிகப்பெரிய வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கிறார்.


இன்னொரு பக்கம் தொடர்ந்து படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். 


இந்த நிலையில் சமீபத்தில் தனது படத்தின் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டு நடித்து வரும் ரஷ்மிகா வழக்கமாக உடற் கட்டமைப்பு நிலையத்திற்கு (GYM) சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது  உடற் கட்டமைப்பு நிலையத்தில் எதிர்பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது.


இதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்ட ரஷ்மிகாவை மருத்துவர்கள் சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.


இதை தொடர்ந்து தற்போது ரஷ்மிகா தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.


இதனால் அவர் நடித்து வந்த படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 
இருந்தாலும் மீண்டும் எப்போது படப்பிடிப்புக்கு திரும்பவேன் என ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் என்று கூறியுள்ளார் ரஷ்மிகா.

Comments
0

MOST READ
01
02
03
04
05