செய்திகள்
பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு

Jan 12, 2025 - 11:06 AM -

0

பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் போதைப்பொருள் மற்றும் மதுபானத்துடன் இரு பெண்கள் உட்பட 22 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.


அஹுங்கல்ல, பாணந்துறை மற்றும் ரம்புக்கனை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் நேற்று (11) இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.


இந்த சோதனைகளுக்கு பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் உதவியையும் பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கைதான சந்கேதநபர்களிடம் இருந்து 83 கிராம் 710 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 15 கிராம் 950 மில்லிகிராம் ஹெராயின் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றினர்.


மேலும், 525 கிராம் கஞ்சா, சட்டவிரோத மதுபானம்  36 லீற்றர் 750 மில்லிலீற்றர் மற்றும் 1066.5 லீற்றர் கோடா ஆகியவற்றைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05